எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி

நான் படித்து அனுபவித்தவைகளையும்,பிடித்து போய் தொகுத்தவைகளையும்,செய்திகளையும் உங்களுக்காக வழங்கியுள்ளேன்.

உங்களது விமர்சனங்களையும்,கருத்துக்களையும் மற்றும் உங்களது படைப்புகளையும் வரவேற்கிறேன் வணக்கம்.

Feb 26, 2014

நடனமாடும் நடராஜர் படம் விக்கிரத்தை வீட்டில் வைக்கலாமா?




நடனமாடும் நடராஜர் படம் விக்கிரத்தை வீட்டில் வைக்கலாமா?


நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன.  நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. 

பரிகாரம் என்றால் என்ன?


பரிகாரம் என்றால் என்ன?


பரிகாரம் என்றால் நமக்குள்ள கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும். 

பயபக்தி என்று சொல்வது ஏன்?


பயபக்தி என்று சொல்வது ஏன்?

பயம் இருக்கும் இடத்தில் தவறு இருக்காது. குறித்த நேரத்தில் பணிக்குச் சென்றுவிட்டால் யாரும் குறைகூற இடமிருக்காது. இப்படி பொறுப்புடன் செயல்படுவதை வேலையில் பயம் இருப்பவர்களிடத்தில் மட்டுமே காணலாம். இது பாராட்டுக்குரிய பயம்.


அதுபோல், இறைவனுக்கு பூஜை செய்யும் போது அதில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிரத்தையுடன் செய்தால் பக்தி முழுமை பெறுகிறது.

இந்த சிரத்தையையும் ஒருவித பயம் என்று கூறலாம். அதாவது, நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் தவறு ஏற்படாமலிருக்க, முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்வதை பயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மனபீதியைக் குறிக்கும் பயத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. எனவே, பயபக்தியுடன் வழிபடுங்கள். 

சக்தி கரகம் என்றல் என்ன?


சக்தி கரகம் என்றல் என்ன?


ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள். 

மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார். 

பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். 

இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின. சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா?


காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா?


இயலாத பட்சத்தில் செய்யலாம். ஆனால், காலை10.30 மணிவரை தேவகாலம் எனப்படுகிறது. இதற்குள் பூஜைகளை முடிப்பதே விசேஷம்.

இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

வெளிச்சமான பகுதியில் வெளிச்சத்தைப் பார்ப்பது அவ்வளவு சந்தோஷம் தராது. ஒரு கோயில் திருவிழா நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம் மனம் அலங்கரிக்கப்பட்ட பூக்களையும், மாலைகளையும், வண்ண விளக்குகளையும் காண்பதிலேயே மனம் லயித்திருக்கும். கச்சேரிகள், பாட்டுகள் என அமர்க்களப்பட்டு போயிருப்போம்.




 ஆனால் இருட்டாக இருக்கின்ற கருவறையில் எண்ணெய் தடவிய அந்த கருங்கல் சிலைக்கு முன்பு கற்பூர ஆரத்தியோ அல்லது நெய் விளக்கோ காட்டுகிற பொழுது கண்கள் பளபளக்க உதடுகள் மினுமினுக்க அதனுடைய உயரமும் அகலமும் தெரியவர, நம் கண்ணுக்குள் தனியாக அந்த உருவம் காட்சியளிக்கிறது. 

இருட்டில் ஒளியை தரிசிப்பது என்பது இன்னும் நெருக்கமாக மனதை அங்கு கொண்டு போய் வைக்கிறது. நம் முன்னோர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். எதனால் உங்கள் மனம் ஒன்றாகக்கூடும் என்பதை நன்றாக கவனித்து உங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Feb 25, 2014

அவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்?


அவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்?

ஹோமம் நடத்தும் சாஸ்திரிகள் அடிக்கடி அவி, ஆகுதி, சமித்துகள் என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் இவைகளுக்கு என்ன பொருள்?

மிகவும் சாதாரணமான பொருள்களுக்கும், புனிதமான பொருள்களுக்கும் வெளித்தோற்றத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் மறைமுகமான வேறுபாடுகள் உண்டு. கண்ணுக்கு தெரியாத பல சக்திகள் அவற்றில் நிறைந்திருக்கும். இதை பொருட்களுக்கு மட்டுமல்ல, வேறு பலவற்றிற்கும் பொருத்தி சொல்லலாம். உதாரணமாக நானும் நீங்களும் பிறந்தால் அது சாதாரண பிறப்பு. அதுவே ஒரு பெரிய மகானோ, இறைவனோ தாயின் வயிற்றில் இருந்து பிறப்பெடுத்தால் அதன் பெயர் அவதாரம். நாம் ஒரு சாதாரண மனிதனை சென்று பார்த்தால் அதுவெறும் பார்வை தான் இறைவனையோ துறவியையோ சென்று பார்த்தால் அதை பார்த்தல் என்று கூறக்கூடாது. தரிசனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மகான் காலமாகி விட்டால் அதன் பெயர் முக்தி. நீங்களும், நானும் காலமானால் அதை இறப்பு, சாவு என்று சர்வசாதாரணமாக சொல்லலாம்.

இதே போன்றது தான் அவி, ஆகுதி, சமித்து என்ற வார்த்தைகள். சமித்து என்றால் காய்ந்த குச்சிகள் என்பது தான் பொருள். அதை குச்சி என்று சொல்லாமல் சமித்து என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. காய்ந்து போன மரக்கட்டைகளை சமைக்க பயன்படுத்தினால் அதை விறகு என்போம். அதே கட்டைகளை, குச்சிகளை யாகத்திற்கோ, ஹோமத்திற்கோ பயன்படுத்தினால் அதன் பெயர் சமித்து. அவி என்பதும் தானியங்களால் செய்யபடுகிற ஒரு வித உணவு. ஆகுதி எனப்படுவதும் உணவுகளை பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாகும். இங்கே இவை அனைத்தும் இறைவழிபாடான யாகங்களுக்கு பயன்படுவதனால், புனித பெயர்களை அடைகிறது. ஒரு பொருளை புனிதமானது என்று நம்பிக்கையோடு தொட்டாலே அதில் இல்லாத புனிதம் இறைவன் அனுகிரஹத்தால் வந்து விடுகிறது. 

விளக்கம் :யோகி ஸ்ரீராமானந்த குரு


சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Feb 18, 2014

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
1.பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2.வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. 
3.சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4.
பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. 
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. 
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. 
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. 
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9.தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10.
ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. 
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது. 
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது. 
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது. 
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது. 
16.அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. 
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது. 
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது. 
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22.
கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் சிவாயநம மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23.
கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். 
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25.
கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது. 
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது


சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது இதன் அர்த்தம் என்ன?

சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்


ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Feb 17, 2014

முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?

சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்


அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். 

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். 

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். 

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். 

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ''தனக்கே சொந்தம்'' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.
 
அப்போது இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வாக்களித்தார். இந் நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள். 

சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms